தேவ கிருபை என்றுமுள்ளதே
தேவ கிருபை என்றுமுள்ளதே
பல்லவி
தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றித் துதித்துப் பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்
சரணங்கள்
1. நெருக்கப்பட்டும் மடிந்திடாமல்
கர்த்தர் தாம் நம்மைக் காத்ததாலே
அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது --- தேவ கிருபை
2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு
முன் சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது --- தேவ கிருபை
3. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே --- தேவ கிருபை
4. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே
திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளதே --- தேவ கிருபை
5. நித்திய தேவனாம் சத்திய பரன்தான்
நித்தமும் நம்முடன் இருப்பதாலே
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளதே --- தேவ கிருபை