Nal Meetparae Ummalae நல் மீட்பரே உம்மேலே
1. நல் மீட்பரே, உம்மேலே
என் பாவம் வைக்கிறேன்;
அன்புள்ள கையினாலே
என் பாரம் நீக்குமேன்;
நல் மீட்பரே, உம்மேலே
என் குற்றம் வைக்க, நீர்
உம் தூய ரத்தத்தாலே
விமோசனம் செய்வீர்.
2. நல் மீட்பரே, உம்மேலே
என் துக்கம் வைக்கிறேன்;
இப்போதிம்மானுவேலே,
எப்பாடும் நீக்குமேன்
நல் மீட்பரே, உம்மேலே
என் தீனம் வைக்க நீர்
உம் ஞானம் செல்வத்தாலே
பூரணமாக்குவீர்.
3. நல் மீட்பரே, உம்பேரில்
என் ஆத்மா சார, நீர்
சேர்ந்து உம் திவ்விய மார்பில்
சோர்பெல்லாம் நீக்குவீர்.
நேசா! இம்மானுவேலே!
இயேசென்னும் நாமமும்
உகந்த தைலம்போலே
சுகந்தம் வீசிடும்.
4. நல் மீட்பரே, பாங்காக
அன்போடு சாந்தமும்
நீர் தந்தும் சாயலாக
சீராக்கி மாற்றிடும்;
நல் மீட்பரே, உம்மோடு
பின் விண்ணில் வாழுவேன்;
நீடூழி தூதர் பாட
பாடின்றிப் பூரிப்பேன்.
1. nal meetparae, ummaelae
en paavam vaikkiraen;
anpulla kaiyinaalae
en paaram neekkumaen;
nal meetparae, ummaelae
en kuttam vaikka, neer
um thooya raththaththaalae
vimosanam seyveer.
2. nal meetparae, ummaelae
en thukkam vaikkiraen;
ippothimmaanuvaelae,
eppaadum neekkumaen
nal meetparae, ummaelae
en theenam vaikka neer
um njaanam selvaththaalae
pooranamaakkuveer.
3. nal meetparae, umpaeril
en aathmaa saara, neer
sernthu um thivviya maarpil
sorpellaam neekkuveer.
naesaa! immaanuvaelae!
iyaesennum naamamum
ukantha thailampolae
sukantham veesidum.
4. nal meetparae, paangaaka
anpodu saanthamum
neer thanthum saayalaaka
seeraakki maattidum;
nal meetparae, ummodu
pin vinnnnil vaaluvaen;
neetooli thoothar paada
paatintip poorippaen.