Narar Meethirangi Arul நரர்மீதிரங்கி அருள்
பல்லவி
ஐயனே நரர்மீதிரங்கி அருள் ஐயனே
சரணங்கள்
1.வையங் கெடுக்கப்பட்டு நொய்யு தனாதி! உன்தன்
துய்ய ஆவியை விடுத்துய்யக் கிருபை புரியும்.- ஐய
2.ஆதத்தின் மக்கள் எல்லாம் போதத் தவிக்கிறார்கள்
வேதத் துரைப் பிரகாரம் நீதத்துன் ஆவி தந்தாள்.- ஐய
3.மைந்தர் மடிந்து நர கந்தனில் வீழாதுன்றன்
மைந்தனின் ஆவியைத் தந் தெந்தவிதமும் காப்பாய்.- ஐய
4.முந்து மனுடருக்குத் தந்த வாக்குத்தத்தத்துன்
சிந்தை மகிழ்ந்தவர் நிர்ப்பந்தம் தவிர்க்க வேண்டும்.- ஐய
5.ஆகாதவன் மடிந்து சாகாதுயர் பிழைக்க
வாகாய் அருள் செயும் திரி யேகா உமக்குத் தோத்ரம்.- ஐய
pallavi
aiyanae nararmeethirangi arul aiyanae
saranangal
1.vaiyang kedukkappattu noyyu thanaathi! unthan
thuyya aaviyai viduththuyyak kirupai puriyum.- aiya
2.aathaththin makkal ellaam pothath thavikkiraarkal
vaethath thuraip pirakaaram neethaththun aavi thanthaal.- aiya
3.mainthar matinthu nara kanthanil veelaathuntan
mainthanin aaviyaith than thenthavithamum kaappaay.- aiya
4.munthu manudarukkuth thantha vaakkuththaththaththun
sinthai makilnthavar nirppantham thavirkka vaenndum.- aiya
5.aakaathavan matinthu saakaathuyar pilaikka
vaakaay arul seyum thiri yaekaa umakkuth thothram.- aiya