Natta Nadu Rathiriyila Christmas Folk Dance நட்ட நடு ராத்திரியில
நட்ட நடு ராத்திரியில ..
மொட்டு போல பூத்தாரே..
மாட்டு கொட்டகையில் உதித்தாரே..
நம்ம.. இயேசு சாமியே ..
நட்ட நடு ராத்திரியில
கொட்டும் பனி சாரலிலே
மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி
மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு சாமி -2
மெட்டு கட்டி பாடுவோம்
கை தட்டி ஆடுவோம் -2
கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமி
நம்ம இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி – கஷ்ட
ஏழைகளை நேசிக்க ஏழையாக
வந்த சாமி நம்ம சாமி – நம்ம இயேசு சாமி
எல்லோருக்கும் வாழ்வு தர மனுஷனாக
வந்த சாமி நம்ம சாமி – நம்ம இயேசு சாமி – 2
நீதி நேர்மை அன்பு கொண்ட இறையாட்சியை
மண்ணில் படைத்திடவே வாழ வந்தார் இயேசு சாமி -2
காலம் பொறந்திடும் நேரம் வந்திடும்
நல்ல காலம் பொறந்திடும்
நல்ல நேரம் வந்திடும்
அன்பு அமைதி ஆண்டவரின்
ஆசி கிடைச்சுடும் – நட்ட நடு
பாலைவன பூமியையே பசுமையாக்க
வந்த சாமி நம்ம சாமி – நம்ம இயேசு சாமி
பசிச்ச வயித்துக்கு இங்கு உணவாக
வந்த சாமி நம்ம சாமி – நம்ம இயேசு சாமி – 2
வறுமை ஏழ்மை இல்லாத உலகத்தயே
உருவாக்க உருவெடுத்தார் இயேசு சாமி
என்றும் வறுமை ஏழ்மை இல்லாத உலகத்தயே
மண்ணில் உருவாக்க உருவெடுத்தார் இயேசு சாமி
வருத்தம் பறந்திடும்
கவலை நீங்கிடும்
நம்ம வருத்தம் பறந்திடும்
மன கவலை நீங்கிடும்
மகிழ்ச்சி என்றும் நம் வாழ்வில்
வந்து தங்கிடும் – நட்ட நடு
natta nadu raaththiriyila ..
mottu pola pooththaarae..
maattu kottakaiyil uthiththaarae..
namma.. yesu saamiyae ..
natta nadu raaththiriyila
kottum pani saaralilae
mottu pola pooththaarae yesu saami
maattu kottakaiyil uthiththaarae yesu saami -2
mettu katti paaduvom
kai thatti aaduvom -2
kashdamellaam pokkiduvaar yesu saami
namma ishdam pola vaala vaippaar ontu kooti – kashda
aelaikalai naesikka aelaiyaaka
vantha saami namma saami – namma yesu saami
ellorukkum vaalvu thara manushanaaka
vantha saami namma saami – namma yesu saami – 2
neethi naermai anpu konnda iraiyaatchiyai
mannnnil pataiththidavae vaala vanthaar yesu saami -2
kaalam poranthidum naeram vanthidum
nalla kaalam poranthidum
nalla naeram vanthidum
anpu amaithi aanndavarin
aasi kitaichchudum – natta nadu
paalaivana poomiyaiyae pasumaiyaakka
vantha saami namma saami – namma yesu saami
pasichcha vayiththukku ingu unavaaka
vantha saami namma saami – namma yesu saami – 2
varumai aelmai illaatha ulakaththayae
uruvaakka uruveduththaar yesu saami
entum varumai aelmai illaatha ulakaththayae
mannnnil uruvaakka uruveduththaar yesu saami
varuththam paranthidum
kavalai neengidum
namma varuththam paranthidum
mana kavalai neengidum
makilchchi entum nam vaalvil
vanthu thangidum – natta nadu