Deva Suthan Poouvlakor தேவ சுதன் பூவுலகோர்
1.தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க மனு
ஜென்மமாக வன்மையுள்ளோன் தன்மையாய் வந்தார் – தேவ
2.வந்த பின் தந்தையர்க் குகந்தபடியே பர
மண்டலன் பூ மண்டலத்தோர் தொண்டன்போல் ஆனார் – தேவ
3.தொண்டனாகி, அண்டர் கோமான் விண்ட மறையே பரி
சுத்தம், மகா சத்யம், மிகு புத்திக்கும் ஊற்றே – தேவ
4.புத்தி மிகு வித்தமறை யைத் துலக்கவே பல
போதகன்மார் பூதலத்தின் மீதில் தெரிந்தார் – தேவ
5.பூதலத்தில் வேதமறை ஓதி, நரர்க்குள் அற்
புதங்கள் செய்துசிதஙகள் ஓதிக் கதங்களை வென்றார் – தேவ
1.thaeva suthan poovulakor paavam olikka manu
jenmamaaka vanmaiyullon thanmaiyaay vanthaar – thaeva
2.vantha pin thanthaiyark kukanthapatiyae para
manndalan poo manndalaththor thonndanpol aanaar – thaeva
3.thonndanaaki, anndar komaan vinnda maraiyae pari
suththam, makaa sathyam, miku puththikkum ootte – thaeva
4.puththi miku viththamarai yaith thulakkavae pala
pothakanmaar poothalaththin meethil therinthaar – thaeva
5.poothalaththil vaethamarai othi, nararkkul ar
puthangal seythusithangakal othik kathangalai ventar – thaeva