Jeeva Jeeva Nathiyae Enakullae ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே
ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே பாயுமே
பாத்திரமாய் மாற்றியே என்னை நிரப்புமே – 2
ஜீவ நதியே எனக்குள்ளே பாயுமே
அதிசயமாய் ஓர் அனலை ஊற்றுமே – ஜீவ ஜீவ
1) நீரோடை அருகில் மரத்தைப் போல என்னை மாற்றினீரே
ஜீவ தண்ணீரால் என்னை நிரப்பி கனி தர செய்தீரே
கேதுரு மரத்தைப் போல என்னை உயர்த்தி வைத்தீரே
ஒலிவ மரத்தைப் போல என்னை செழிப்பாய் மாற்றினீரே – ஜீவ நதியே
2) பாவியான என்னைக் கூட தேடி வந்தீரே
பாவ சேற்றில் இருந்த என்னை தூக்கி எடுத்தீரே
தாகத்தோடு வந்தபோது தாகம் தீர்த்தீரே
ஜீவ தண்ணீரால் என்னையும் நிரப்பி வைத்தீரே – ஜீவ நதியே
3) உலகம் என்னை வெறுத்தபோது என்னை தாங்கினீரே
குறைகள் என்னில் இருந்தபோதும் கிருபை தந்தீரே
அமர்ந்த தண்ணீர் அண்டை என்னை நடத்திச் சென்றீரே
மகனே என்று உந்தன் தோளில் என்னை சுமந்தீரே – ஜீவ நதியே
jeeva jeeva nathiyae enakkullae paayumae
paaththiramaay maattiyae ennai nirappumae – 2
jeeva nathiyae enakkullae paayumae
athisayamaay or analai oottumae – jeeva jeeva
1) neerotai arukil maraththaip pola ennai maattineerae
jeeva thannnneeraal ennai nirappi kani thara seytheerae
kaethuru maraththaip pola ennai uyarththi vaiththeerae
oliva maraththaip pola ennai selippaay maattineerae – jeeva nathiyae
2) paaviyaana ennaik kooda thaeti vantheerae
paava settil iruntha ennai thookki eduththeerae
thaakaththodu vanthapothu thaakam theerththeerae
jeeva thannnneeraal ennaiyum nirappi vaiththeerae – jeeva nathiyae
3) ulakam ennai veruththapothu ennai thaangineerae
kuraikal ennil irunthapothum kirupai thantheerae
amarntha thannnneer anntai ennai nadaththich senteerae
makanae entu unthan tholil ennai sumantheerae – jeeva nathiyae