Solli Vanthun Paatham சொல்லிவந்துன் பாதம்
பல்லவி
சொல்லிவந்துன் பாதம் புல்லினேன், பரனே, நீயும்
தூரமாகாதாள்வாய், நேசனே.
அனுபல்லவி
எல்லியும் அல்லியும் நொந்து யான் இரங்கவே கசிந்து
கல்லு மனமும் கரைந்து காதல் கூருமே உகந்து. – சொல்
சரணங்கள்
1. இரும்பு நெஞ்சமும் குழையாதோ?-ஏழை கூப்பிட்டால்
இறையோனே காதில் நுழையாதோ?
திரும்பி என்துயர் களையாயோ?-உன் திருவடி
சேர்க்க என்றனை அழையாயோ?
அரும்பி விழுங் கண்ணீர் ஆறாய், அலைபுரளும் தன்மை தேறாய்;
விரும்பி நீ வா என்று காறாய், மெய்யனெ நின்னருட் பேறாய். – சொல்
2. சந்ததம் உனையே நம்பினேன்,-சத்துருப்பேயின்
சற்பனையால் மனம் வெம்பினேன்.
சொந்தம் நான் உனக்கியம்பினேன்,-நினைக்காணாதே
துக்கமே விடத்ததும்பினேன்.
பந்தமாமெ வையும் மாளப் பற்றெலாமுன் பாதத்தேறச்
சிந்தை உன்னருளே வீறச் சீவன் முத்தி சேர்ந்தே யாறச் – சொல்
3. ஆரிடத்தென் குறை சொல்லுவேன்-ஈசா. வேறே
ஆரைத் தஞ்சமாகப் புல்லுவேன்?
சேரிடத் தெவ்விதம் சொல்லுவேன்?-முப்பகை செய்யும்
தீமையை எப்படிச் சொல்லுவேன்?
பாரிடத்து வந்த பாதா, பாக்ய வேதவாக்ய போதா,
சீரனைத் தினுக்கு மேதா, திவ்விய சற்குரு நாதா. – சொல்
pallavi
sollivanthun paatham pullinaen, paranae, neeyum
thooramaakaathaalvaay, naesanae.
anupallavi
elliyum alliyum nonthu yaan irangavae kasinthu
kallu manamum karainthu kaathal koorumae ukanthu. – sol
saranangal
1. irumpu nenjamum kulaiyaatho?-aelai kooppittal
iraiyonae kaathil nulaiyaatho?
thirumpi enthuyar kalaiyaayo?-un thiruvati
serkka entanai alaiyaayo?
arumpi vilung kannnneer aaraay, alaipuralum thanmai thaeraay;
virumpi nee vaa entu kaaraay, meyyane ninnarut paeraay. – sol
2. santhatham unaiyae nampinaen,-saththuruppaeyin
sarpanaiyaal manam vempinaen.
sontham naan unakkiyampinaen,-ninaikkaannaathae
thukkamae vidaththathumpinaen.
panthamaame vaiyum maalap pattelaamun paathaththaerach
sinthai unnarulae veerach seevan muththi sernthae yaarach – sol
3. aaridaththen kurai solluvaen-eesaa. vaerae
aaraith thanjamaakap pulluvaen?
seridath thevvitham solluvaen?-muppakai seyyum
theemaiyai eppatich solluvaen?
paaridaththu vantha paathaa, paakya vaethavaakya pothaa,
seeranaith thinukku maethaa, thivviya sarkuru naathaa. – sol