Sooriyan Marainthu Anthakaaram Soolnthu சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது
சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது
சோர்ந்த என் தேகம் அயர்ந்துமே
இளைப்பாறப் போகுது
தூயா கிருபை கூர்ந்து காருமையா
பகல் முழுவதும் பட்சமாய் என்னைப் பாதுகாத்தீரே
சகலதீமையுமகல வைத்தருள் நலமுந்தந்தீரே
சுவாமி உந்தன் பாதம் பணிகிறேன்
பாதகம் மிகப் புரிந்தேன் பரம நாயகா
பாவி நானிந்த நாளிலும் பல தீவினைசெய்தேனையா
கோபமின்றி என் பாவம் பொறுத்திடுவாய்
ராவில் வரும் மோசமொன்றும் என்னைச் சேராமல்
பேயின் சர்ப்பனை தீயசொப்பனம் மனதில் நேராமல்
நேயா நின் நல்தூதர் காவல் தா
ஆத்துமம் சரீரம் எனக்கான யாவையும்
அப்பனுன் கையிலொப்புவித்து நான் அமர்ந்து தூங்குவேன்
ஐயனே உன் பொன்னடி சரணம்
sooriyan marainthu anthakaaram soolnthathu
sorntha en thaekam ayarnthumae
ilaippaarap pokuthu
thooyaa kirupai koornthu kaarumaiyaa
pakal muluvathum patchamaay ennaip paathukaaththeerae
sakalatheemaiyumakala vaiththarul nalamunthantheerae
suvaami unthan paatham pannikiraen
paathakam mikap purinthaen parama naayakaa
paavi naanintha naalilum pala theevinaiseythaenaiyaa
kopaminti en paavam poruththiduvaay
raavil varum mosamontum ennaich seraamal
paeyin sarppanai theeyasoppanam manathil naeraamal
naeyaa nin nalthoothar kaaval thaa
aaththumam sareeram enakkaana yaavaiyum
appanun kaiyiloppuviththu naan amarnthu thoonguvaen
aiyanae un ponnati saranam