Kaattru Thisai Nangilum காற்றுத் திசை நான்கிலும்
காற்றுத் திசை நான்கிலும்
நின்றுலர்ந்த எலும்பும்
ஜீவன் பெறச் செய்யுமே
வல்ல தேவ ஆவியே
ஈரமற்ற நெஞ்சத்தில்
பனிபோல் இந்நேரத்தில்
இறங்கும், நல்லாவியே
புது ஜீவன் தாருமே
சத்துவத்தின் ஆவியே
பேயை நித்தம் வெல்லவே
துணை செய்து வாருமேன்
போந்த சக்தி தாருமேன்
ஞானம் பெலன் உணர்வும்
அறிவும் விவேகமும்
தெய்வ பக்தி பயமும்
ஏழும் தந்து தேற்றிடும்
தந்தை மைந்தன் ஆவியே
எங்கள் பாவம் நீங்கவே
கிருபை கடாட்சியும்
சுத்தமாக்கியருளும்
kaattuth thisai naankilum
nintularntha elumpum
jeevan perach seyyumae
valla thaeva aaviyae
eeramatta nenjaththil
panipol innaeraththil
irangum, nallaaviyae
puthu jeevan thaarumae
saththuvaththin aaviyae
paeyai niththam vellavae
thunnai seythu vaarumaen
pontha sakthi thaarumaen
njaanam pelan unarvum
arivum vivaekamum
theyva pakthi payamum
aelum thanthu thaettidum
thanthai mainthan aaviyae
engal paavam neengavae
kirupai kadaatchiyum
suththamaakkiyarulum