Karthaavai Nambuvorai கர்த்தாவை நம்புவோரை
1.கர்த்தாவை நம்புவோரை
ஓர்க்காலும் கைவிடார்,
பொல்லாரின் சீறுமாற்றை
வீணாக்கிப் போடுவார்;
சன்மார்க்கரைப் பலத்த
கையால் தயாபரர்
ரட்சித்துத் தாழ்ச்சியற்ற
அன்பாய் விசாரிப்பார்.
2.கர்த்தாவின் சித்தத்துக்கு
கீழ்ப்பட்டடங்குவேன்;
அப்போ நான் ஜீவனுக்கு
நேரே நடக்கிறேன்;
லௌகீக வாழ்வின் பாதை
வேண்டாம், நான் இயேசுவை
பின்பற்றி, இங்கே வாதை
சகித்தால், மாநன்மை.
3. என்மேலே பாரமாக
வரும் இக்கட்டிலே
பராபரன் அன்பாக
என்னோடிருப்பாரே;
பொறுக்கிற வரத்தை
அவரிடம் கேட்பேன்,
அவ்விதமாய் இக்கட்டை
சகித்து வெல்லுவென்.
4. கசப்பும் கர்த்தராலே
வரும், நான் பின்வாங்கேன்;
ஜெபத்தில் ஆசையோடே
விண்ணப்பம் பண்ணுவேன்;
அப்போது தயவாக
காப்பாரே, கைவிடார்;
இக்கட்டு பெரிதாக
போம்போது தேற்றுவார்.
5.அநேகர் ஆசைகொள்ளும்
பொருளை வாஞ்சியேன்;
கர்த்தாவின் வார்த்தை சொல்லும்
மெய்ப்பொருள் நாடுவேன்;
என் பொக்கிஷம், என் செல்வம்,
என் ஆஸ்த்தி கிறிஸ்துவே;
என் பாக்கியம், பேரின்பம்,
எல்லாம் என் மீட்பரே.
6.என் இயேசுவை நான் பற்றி
தொடர்வேன் ஆவலாய்;
என் சாபத்தை அகற்றி
ரட்சித்தார் நேசமாய்;
நான் தப்ப எனக்காக
தம் ரத்தம் சிந்தினார்;
1.karththaavai nampuvorai
orkkaalum kaividaar,
pollaarin seerumaattaை
veennaakkip poduvaar;
sanmaarkkaraip palaththa
kaiyaal thayaaparar
ratchiththuth thaalchchiyatta
anpaay visaarippaar.
2.karththaavin siththaththukku
geelppattadanguvaen;
appo naan jeevanukku
naerae nadakkiraen;
laugeeka vaalvin paathai
vaenndaam, naan yesuvai
pinpatti, ingae vaathai
sakiththaal, maananmai.
3. enmaelae paaramaaka
varum ikkattilae
paraaparan anpaaka
ennotiruppaarae;
porukkira varaththai
avaridam kaetpaen,
avvithamaay ikkattaை
sakiththu velluven.
4. kasappum karththaraalae
varum, naan pinvaangaen;
jepaththil aasaiyotae
vinnnappam pannnuvaen;
appothu thayavaaka
kaappaarae, kaividaar;
ikkattu perithaaka
pompothu thaettuvaar.
5.anaekar aasaikollum
porulai vaanjiyaen;
karththaavin vaarththai sollum
meypporul naaduvaen;
en pokkisham, en selvam,
en aasththi kiristhuvae;
en paakkiyam, paerinpam,
ellaam en meetparae.
6.en yesuvai naan patti
thodarvaen aavalaay;
en saapaththai akatti
ratchiththaar naesamaay;
naan thappa enakkaaka
tham raththam sinthinaar;