Kartha Um Maatchi Karathaal கர்த்தா உம் மாட்சி கரத்தால்
1. கர்த்தா உம் மாட்சி கரத்தால்
நோய் சாவும் நீங்கிற்றே
சுத்தாங்க சுகம் ஜீவனும்
உம் வார்த்தை நல்கிற்றே
அந்தகர் ஊமை செவிடர்
நிர்ப்பந்தராம் குஷ்டர்,
நொந்த பல்வேறு ரோகஸ்தர்
நாடோறும் வந்தனர்.
2. மா வல்ல கரம் தொடவே
ஆரோக்கியம் பெற்றனர்
பார்வை நற்செவி பேச்சுமே
பெற்றே திரும்பினர்;
மா வல்ல நாதா, இன்றுமே
மறுகும் ரோகியும்
சாவோரும் தங்கும் சாலையில்
ஆரோக்கியம் அளியும்.
3. ஆரோக்கிய ஜீவ நாதரே
நீரே எம் மீட்பராய்
ஆரோக்கியம் ஜீவன் சீருமே
அருளும் தயவாய்;
சரீரம் நற்சீர் நிறைந்து
உம் மக்கள் யாவரும்
சன்மார்க்க ஞானம் உள்ளோராய்
உம்மைத் துதிக்கவும்.
1. karththaa um maatchi karaththaal
nnoy saavum neengitte
suththaanga sukam jeevanum
um vaarththai nalkitte
anthakar oomai sevidar
nirppantharaam kushdar,
nontha palvaetru rokasthar
naatoorum vanthanar.
2. maa valla karam thodavae
aarokkiyam pettanar
paarvai narsevi paechchumae
pette thirumpinar;
maa valla naathaa, intumae
marukum rokiyum
saavorum thangum saalaiyil
aarokkiyam aliyum.
3. aarokkiya jeeva naatharae
neerae em meetparaay
aarokkiyam jeevan seerumae
arulum thayavaay;
sareeram narseer nirainthu
um makkal yaavarum
sanmaarkka njaanam ulloraay
ummaith thuthikkavum.