Ooivu Naal Ithu Manamae ஓய்வுநாள் இது மனமே
ஓய்வுநாள் இது, மனமே,-தேவனின்
உரையைத் தியா னஞ் செய் கவனமே.
அனுபல்லவி
நேய தந்தையர் சேயர்க் குதவிய
நெறி இச் சுவிசேஷ வசனமே. – ஓய்வு
சரணங்கள்
1. ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர்
சேவடி உனக் கபயமே;
மேவி அவர் கிருபாசனத்தின் முன்
வேண்டிக்கொள், இது சமயமே. – ஓய்வு
2. ஆறு நாளுனக் களித்தவர், இளைப்
பாறி எழினில் களித்தவர்;
கூறும் பூரண ஆசீர்வாதத்தைக்
குறித்துணை இதற் கழைக்கிறார். – ஓய்வு
3. கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்று
காலை நண் பகல் மாலையும்;
சுத்தம் நாடுவோர் யாவரும் வந்து
துதி செய்யும் இத் தேவாலயம். – ஓய்வு
oyvunaal ithu, manamae,-thaevanin
uraiyaith thiyaa nanj sey kavanamae.
anupallavi
naeya thanthaiyar seyark kuthaviya
neri ich suvisesha vasanamae. – oyvu
saranangal
1. jeeva suka puthra selvam thanthavar
sevati unak kapayamae;
maevi avar kirupaasanaththin mun
vaenntikkol, ithu samayamae. – oyvu
2. aatru naalunak kaliththavar, ilaip
paari elinil kaliththavar;
koorum poorana aaseervaathaththaik
kuriththunnai ithar kalaikkiraar. – oyvu
3. karththar aasanam kurukik kael intu
kaalai nann pakal maalaiyum;
suththam naaduvor yaavarum vanthu
thuthi seyyum ith thaevaalayam. – oyvu