yeno yeno vanthathu yeno ஏனோ ஏனோ வந்தது ஏனோ
பாடல் 2
ஏனோ ஏனோ வந்தது ஏனோ
என்னை மீட்கும் உம்தாகம்
அது தானோ
1.ஏதேனில் பிறந்தது பாவம்
என்றும் தொடர்ந்தது சாபம்
பாவம் நீக்கிட சாபம் போக்கிட
தேவன் நினைத்தாரே
ஏக மைந்தனை பூமிக்கு தந்தாரே
உம்மை வாழ்த்தியே வரவேற்கிறோம் இயேசு பாலனே
2.புல்லணை மஞ்சம் தானோ
முன்னனை தொட்டில் தானோ
ராஜகுமாரன் தேவகுமாரன்
தொழில் பிறந்தாரே
ஏழை ரூபமாய் பூமிக்கு வந்தாரே
உம்மை வாழ்த்தியே வரவேற்கிறேன் இயேசு பாலனே
3.மன்னவர் பொன்னும் தந்தார்
மண்ணவர் பாடி மகிழ்ந்தார்
வானம் துறந்திட்ட அன்புக்கு ஈடாய்
என்ன நான் செய்குவேன்
என்னையே தருகிறேன் ஏற்றுக்கொள்ளுமே
என் உள்ளத்தில் வாருமே இயேசு பாலனே