ennai peyar solli azhaithu என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்து
என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்து
எனக்கே என்னைக்காண்பித்தீர்
என்னை உம் அன்பினாலே அழைத்து
எனக்கே என்னைக்காண்பித்தீர்
கீழல்ல மேலாக வாலல்ல தலையாக -2
புழுதியில் இருந்த என்னைத் தூக்கினீர் உம் அன்பால் -2
உம் அன்பை நான் என்னவென்றுப்பாடுவேன்
உம் அன்பை நான் எப்படிப்பாடுவேன் -2
புழுதியில் இருந்த என்னைத் தூக்கினீர் உம் அன்பால் -2 இயேசுவே
எனக்காய் உம் ஜீவன் தந்து
என் பாவமெல்லாம் போக்கினீரே
என்னை உம் பிள்ளையாக மாற்றிப்
புதுவாழ்வுத் தந்தீரே
இயேசுவே! என்நேசரே! அன்பரே! எனதுயிரே!
இயேசுவே! இனியவரே! பேரழகே! ஆருயிரே!
இயேசுவே