En Belaveenam Neer Arigindreer என் பெலவீனம் நீர் அறிகின்றீர்
பல்லவி
என் பெலவீனம் நீர் அறிகின்றீர்
என் கஷ்டங்கள் அறிகின்ற தேவன் நீர் – 2
நான் உமை மறந்து தூரம் சென்றபோதும்
மறவாமல் எனை அழைத்து அனைத்தவர் நீர் – 2
சரணம் 1
நண்பர்கள் உற்றார் உறவினர் அனைவரும்
என்னை வெறுத்து தள்ளினபோதும் – 2
நீர் மட்டும் என்னை வெறுக்கவில்லை – உம்
அநாதி ஸ்நேகத்தால் அனைத்துக்கொண்டீர் – 2
சரணம் 2
சோர்ந்திடும் வேளையில் உமை தேடி வந்தேன்
உம் வேத வசனத்தால் தேற்றினீரே – 2
மலைபோன்ற கஷ்டங்கள் எனில் வந்த போதும்
மெழுகை போல உருக செய்தீர் – 2
சரணம் 3
உடைந்த உள்ளதை உருவாக்குகின்ற
உயிருள்ள தேவன் நீர் அல்லவோ – 2
நீர் எந்தன் தகப்பனாய் என்னோடிருக்க
நான் ஒருபோதும் அஞ்ச மாட்டேன் – 2
pallavi
en pelaveenam neer arikinteer
en kashdangal arikinta thaevan neer – 2
naan umai maranthu thooram sentapothum
maravaamal enai alaiththu anaiththavar neer – 2
saranam 1
nannparkal uttaாr uravinar anaivarum
ennai veruththu thallinapothum – 2
neer mattum ennai verukkavillai – um
anaathi snaekaththaal anaiththukkonnteer – 2
saranam 2
sornthidum vaelaiyil umai thaeti vanthaen
um vaetha vasanaththaal thaettineerae – 2
malaiponta kashdangal enil vantha pothum
melukai pola uruka seytheer – 2
saranam 3
utaintha ullathai uruvaakkukinta
uyirulla thaevan neer allavo – 2
neer enthan thakappanaay ennotirukka
naan orupothum anja maattaen – 2