En Idhayathayae என் இதயத்தையே உம்
என் இதயத்தையே உம் சமூகத்திலே
ஊற்றிவிட்டேன் இயேசுவே
என் பாரங்களை உம் பாதத்திலே
இறக்கிவைத்தேன் இயேசுவே (2)
என் ஜெபத்தை கேட்டருளும்
என் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும் (2)
1. என் பாவங்கள் ஒவ்வொன்றாய்
உம்மிடம் அறிக்கை செய்தேன் (2)
உம் இரத்தத்தால் என்னை கழுவி
மார்போடு அணைத்துக்கொள்ளும் (2)
– என் ஜெபத்தை
2. என் கண்ணீர்கள் யாவற்றையும்
உம் பாதம் ஊற்றிவிட்டேன் (2)
ஆணி பாய்ந்த (உம்) கரம் கொண்டு
(என்) கண்ணீரை துடைத்தருளும் (2)
– என் ஜெபத்தை
3. என் வாழ்க்கையை உம் கரத்தில்
முழுவதும் ஒப்படைத்தேன் (2)
வல்லமையான உம் கரத்தால்
(என்) கரம் பிடித்து நடத்திச்செல்லும் (2)
– என் ஜெபத்தை
en ithayaththaiyae um samookaththilae
oottivittaen yesuvae
en paarangalai um paathaththilae
irakkivaiththaen yesuvae (2)
en jepaththai kaettarulum
en vinnnappam aettukkollum (2)
1. en paavangal ovvontay
ummidam arikkai seythaen (2)
um iraththaththaal ennai kaluvi
maarpodu annaiththukkollum (2)
– en jepaththai
2. en kannnneerkal yaavattaைyum
um paatham oottivittaen (2)
aanni paayntha (um) karam konndu
(en) kannnneerai thutaiththarulum (2)
– en jepaththai
3. en vaalkkaiyai um karaththil
muluvathum oppataiththaen (2)
vallamaiyaana um karaththaal
(en) karam pitiththu nadaththichchellum (2)
– en jepaththai