Enthan Mugam Paarthirunguvayae எந்தன் முகம் பார்த்திரங்குவாயே
எந்தன் முகம் பார்த்திரங்குவாயே
பல்லவி
தந்தை சரு வேஸ்வரனே உந்தன் மகன் யேசுவுக்காய்
எந்தன் முகம் பார்த்திரங்குவாயே – இம்மாத்ரம் நீயே
சரணங்கள்
1.அந்தமதிலா அகாரி சந்ததமுமே விசாரி
விந்தை அருள் மேவும் அசரீரி மெஞ்ஞான வாரி! -தந்
2.ஞானபரனே ஒருத்வ மானமுதலே திரித்வ
மேன்மை வடிவான மகத்வ மேலான தத்வ! – தந்
3.விற்பன விவேக நூலா அற்புதமான சீலா
நற்பரம லோக அனுகூலா நன்மை க்ருபாலா! – தந்
4.ஆதிமுதலான நேசா வேதமறை மீதுலாசா
பேதகம் இலாத சத்ய வாசா ஞான ப்ரகாசா!- தந்
5.வந்த வினை யாவும் தீரும் நிந்தை அணுகாமல் காரும்
சிந்தை மகிழ்ந்தே கண்ணாலே பாரும் சீர்பாதம்தாரும்!- தந்
enthan mukam paarththiranguvaayae
pallavi
thanthai saru vaesvaranae unthan makan yaesuvukkaay
enthan mukam paarththiranguvaayae – immaathram neeyae
saranangal
1.anthamathilaa akaari santhathamumae visaari
vinthai arul maevum asareeri menjnjaana vaari! -than
2.njaanaparanae oruthva maanamuthalae thirithva
maenmai vativaana makathva maelaana thathva! – than
3.virpana vivaeka noolaa arputhamaana seelaa
narparama loka anukoolaa nanmai krupaalaa! – than
4.aathimuthalaana naesaa vaethamarai meethulaasaa
paethakam ilaatha sathya vaasaa njaana prakaasaa!- than
5.vantha vinai yaavum theerum ninthai anukaamal kaarum
sinthai makilnthae kannnnaalae paarum seerpaathamthaarum!- than