Enthan Sampathentru Sollavae எந்தன் சம்பத்தென்று சொல்லவே
பல்லவி
எந்தன் சம்பத்தென்று சொல்லவே – வேறொன் றில்லையே
இயேசு மாத்திரம் சம்பத்தாவாரே!
அனுபல்லவி
சாவை வென்று உயிர்த்தெழுந்தார் – வான லோகமதிற் சென்றார்
பாவியாம் எனக்காய் என்றும் தாதையுடன் யாசிக்கின்றார்
சரணங்கள்
1. குருசிலெனக்காய் மரித்தாரே – க்ரூரவதையாய்
சொர்க்க கானான் சேர்க்கவெனையே
பாவம் நீக்கி சாபம் மாற்றி, சாவின் மேலும் ஜெயம் நல்கி
வேகம் வாறே னென்றுருதி வார்த்தை கூறி ஏறிச் சென்றார் – எந்தன்
2. இயேசுவுக்காய் சர்வ சம்பத்தும் யாகமாய் வைத்து
என்றென்றும் அவரில் நேசமாய்,
இயேசுவுக்காய் வேலை செய்து என் சிலுவையை எடுத்து
பிராண நாதர் சேவையில் என்னாயுளெல்லாம் கழிப்பேனே – எந்தன்
3. உத்தம ஊழியன் என்னும் நான் – அத்தன் முன்பாக
எத்தகைய வெட்கமின்றியே;
பக்தியோடென் அன்பர் முன்பில் ஆனந்த புஷ்பஞ் சொரியும்
பாக்யமேறும் மகோற்சவ வாழ்வுகாலம் வந்திட்டதே – எந்தன்
4. ஆட்டுக்குட்டியாமென் நேசரின் – சாலேம் நகரின்
நாட்டமுரும் வாசம் திட்டமாம்!
லோகமென்னைக் கைவிடினும், தேகம் மெலிந்துருகினும்
துக்கம் சிறிதேனும் கொள்ளேன், இயேசுவையே பின்தொடர்வேன் – எந்தன்
5. எந்தன் தேசம் இப்புவியென்று – அன்யனாம் சாது!
சொந்த தேசம் நாடினேன் நன்று;
திகழுறு சாலேமென்னை மகிழ்வுடன் வரவேற்க
மகிமையாம் வாசல்கள் தம் தலைகளை உயர்த்திடும் – எந்தன்
pallavi
enthan sampaththentu sollavae – vaeron rillaiyae
yesu maaththiram sampaththaavaarae!
anupallavi
saavai ventu uyirththelunthaar – vaana lokamathir sentar
paaviyaam enakkaay entum thaathaiyudan yaasikkintar
saranangal
1. kurusilenakkaay mariththaarae – krooravathaiyaay
sorkka kaanaan serkkavenaiyae
paavam neekki saapam maatti, saavin maelum jeyam nalki
vaekam vaatae nenturuthi vaarththai koori aerich sentar – enthan
2. yesuvukkaay sarva sampaththum yaakamaay vaiththu
ententum avaril naesamaay,
yesuvukkaay vaelai seythu en siluvaiyai eduththu
piraana naathar sevaiyil ennaayulellaam kalippaenae – enthan
3. uththama ooliyan ennum naan – aththan munpaaka
eththakaiya vetkamintiyae;
pakthiyoden anpar munpil aanantha pushpanj soriyum
paakyamaerum makorsava vaalvukaalam vanthittathae – enthan
4. aattukkuttiyaamen naesarin – saalaem nakarin
naattamurum vaasam thittamaam!
lokamennaik kaivitinum, thaekam melinthurukinum
thukkam sirithaenum kollaen, yesuvaiyae pinthodarvaen – enthan
5. enthan thaesam ippuviyentu – anyanaam saathu!
sontha thaesam naatinaen nantu;
thikalutru saalaemennai makilvudan varavaerka
makimaiyaam vaasalkal tham thalaikalai uyarththidum – enthan