Un Vaasal Thira உன் வாசல் திற
1. உன் வாசல் திற, சீயோனே
மெய்ப் பொருளானவர்
தாமே ஆசாரி பலியாய்
உன்னிடம் வந்தனர்.
2. கடாக்கள் ரத்தம் சிந்தல் ஏன்?
பிதாவின் மைந்தனார்
தம் பீடமீது பாவத்தின்
நிவாரணம் ஆனார்.
3. தன் பாலன் ஸ்வாமி என்றோர்ந்தே
தூய தாய் மரியாள்
ஓர் ஜோடு புறாக் குஞ்சுகள்தான்
காணிக்கையாய் வைத்தாள்.
4. தாம் எதிர்பார்த்த கர்த்தரை
அன்னாள் சிமியோனும்
கண்ணுற்ற சாட்சி கூறினார்
ஆனந்தமாகவும்.
5. சௌபாக்யவதி மாதாவோ
தன் நெஞ்சில் யாவையும்
வைத்தெண்ணியே வணங்கினாள்
மா மௌனமாகவும்.
6. பிதா, குமாரன், ஆவிக்கும்
நீடுழி காலமே
எல்லாக் கனம், மகிமையும்
மேன்மேலும் ஓங்குமே.
1. un vaasal thira, seeyonae
meyp porulaanavar
thaamae aasaari paliyaay
unnidam vanthanar.
2. kadaakkal raththam sinthal aen?
pithaavin mainthanaar
tham peedameethu paavaththin
nivaaranam aanaar.
3. than paalan svaami entornthae
thooya thaay mariyaal
or jodu puraak kunjukalthaan
kaannikkaiyaay vaiththaal.
4. thaam ethirpaarththa karththarai
annaal simiyonum
kannnutta saatchi koorinaar
aananthamaakavum.
5. saupaakyavathi maathaavo
than nenjil yaavaiyum
vaiththennnniyae vananginaal
maa maunamaakavum.
6. pithaa, kumaaran, aavikkum
needuli kaalamae
ellaak kanam, makimaiyum
maenmaelum ongumae.