Intha Naal Enakku இந்த நாள் எனக்கு
இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ரூபகம்
பல்லவி
இந்த நாள் எனக்குத் தந்த நல் நாதா;
சந்ததமும் நமோ சரணம்
அனுபல்லவி
வந்தென்னை யாளும் – வரந்தா இந்நாளும்
வல்லா இத்தருணம்
சரணங்கள்
1. பானொளி வீசுமுன் வானொளி என்னகம்
தாவ கிருபை ஈவா
பாதை காட்டிப் பல வாதை ஓட்டு மெந்தன்
பாவநாச தேவா – இந்த
2. பாழுடலின் செய்கை பதினேழினின்று
பண்பாய்ப் பாதுகாரும்
வாழுமாவியின் கனி ஒன்பதும் இன்று
வர்த்தனையாய்த் தாரும் – இந்த
iraakam: senjurutti thaalam: roopakam
pallavi
intha naal enakkuth thantha nal naathaa;
santhathamum namo saranam
anupallavi
vanthennai yaalum – varanthaa innaalum
vallaa iththarunam
saranangal
1. paanoli veesumun vaanoli ennakam
thaava kirupai eevaa
paathai kaattip pala vaathai ottu menthan
paavanaasa thaevaa – intha
2. paaludalin seykai pathinaelinintu
pannpaayp paathukaarum
vaalumaaviyin kani onpathum intu
varththanaiyaayth thaarum – intha