Aazhntha Thayavae Sollum ஆழ்ந்த தயவே சொல்லும்
மெட்டு: ஜீவ நதியின் ஓரமாய்
1. ஆழ்ந்த தயவே! சொல்லும்
உண்டோ எனக்கும் தயை?
பிரதான பாவி நான்!
மன்னித்து மீட்பை ஈவீரோ?
பல்லவி
தேவன் அன்பாய் இருக்கிறார்;
ஜீவித்து இயேசு நேசிக்கிறார்
2. மீட்பை அசட்டை செய்தேன்!
இயேசுவைக் கோபம் மூட்டினேன்!
மீட்பர் சொல்லைக் கேட்டிலேன்!
இயேசுவை நான் துக்கிப்பித்தேன்! – தேவன்
3. மீட்பர் காயம் காட்டுகிறார்!
கரங்களை நீட்டுகிறார்!
தேவன் அன்பாய் இருக்கிறார்!
ஜீவித்து இயேசு நேசிக்கிறார்! – தேவன்
mettu: jeeva nathiyin oramaay
1. aalntha thayavae! sollum
unntoo enakkum thayai?
pirathaana paavi naan!
manniththu meetpai eeveero?
pallavi
thaevan anpaay irukkiraar;
jeeviththu yesu naesikkiraar
2. meetpai asattaை seythaen!
yesuvaik kopam moottinaen!
meetpar sollaik kaettilaen!
yesuvai naan thukkippiththaen! – thaevan
3. meetpar kaayam kaattukiraar!
karangalai neettukiraar!
thaevan anpaay irukkiraar!
jeeviththu yesu naesikkiraar! – thaevan