Aadhi Meidevanae Um ஆதி மெய்தேவனே உம்
பல்லவி
ஆதி மெய்தேவனே உம் அன்பிற்கோர் எல்லையுண்டோ
நீதியாம் ஜோதி அனாதி தேவனே – உம்
நீதிக்கோர் எல்லையுண்டோ – இயேசு
சரணங்கள்
1. எத்தனையோ பாவங்கள் அத்தனே அகற்றினீர்
பத்திலோர் பங்கு போதா தென்றெண்ணி – நான்
தத்தம் செய்தேன் உமக்கே – ஆதி
2. எத்தன் எனக்காக – இன்னுயிர் கொடுத்தீரே
எதைச் செலுத்துவேன் இயேசுவின் அன்பிற்கு
இதயம் ஈடாகுமோ? – ஆதி
3. ஆழ்ந்த கடலில் அமிழ்ந்து போன என்னைத்
தூக்கி எடுத்த உம் அன்பை நினைக்க என்
என் துதிகள் தான் போதுமோ? – ஆதி
4. பாவத்தில் மாண்ட என்னைக் கோபத்தால் அழிக்காமல்
இரட்சித்த உந்தன் அன்பை நினைத்து – நான்
பட்சமாய் போற்றிடுவேன் – ஆதி
5. அலையும் புயலுமாய் அமிழ்த்தி வீழ்த்துகையில்
நான்தான் பயப்படாதிருங்கள் என்று உம்
அன்பின் தொனி கேட்குதே – ஆதி
6. கெத்சமெனே பூங்காவில் பட்சமாய் வேண்டி நிற்கும்
இரத்த வியர்வையில் வேதனை தரும் உம்
சத்தம் தொனித்திடுதே – ஆதி
7. எண்ணும் நன்மை எதுவும் எண்ணிலே இல்லை ஐயா
பின்னே ஏன் என்னை நேசித்தீரோ
என்னில் கொண்ட உம் அன்புதானோ – ஆதி
pallavi
aathi meythaevanae um anpirkor ellaiyunntoo
neethiyaam jothi anaathi thaevanae – um
neethikkor ellaiyunntoo – yesu
saranangal
1. eththanaiyo paavangal aththanae akattineer
paththilor pangu pothaa thentennnni – naan
thaththam seythaen umakkae – aathi
2. eththan enakkaaka – innuyir koduththeerae
ethaich seluththuvaen yesuvin anpirku
ithayam eedaakumo? – aathi
3. aalntha kadalil amilnthu pona ennaith
thookki eduththa um anpai ninaikka en
en thuthikal thaan pothumo? – aathi
4. paavaththil maannda ennaik kopaththaal alikkaamal
iratchiththa unthan anpai ninaiththu – naan
patchamaay pottiduvaen – aathi
5. alaiyum puyalumaay amilththi veelththukaiyil
naanthaan payappadaathirungal entu um
anpin thoni kaetkuthae – aathi
6. kethsamenae poongaavil patchamaay vaennti nirkum
iraththa viyarvaiyil vaethanai tharum um
saththam thoniththiduthae – aathi
7. ennnum nanmai ethuvum ennnnilae illai aiyaa
pinnae aen ennai naesiththeero
ennil konnda um anputhaano – aathi