Asai Manaalane Amen ஆசை மணாளனே ஆமென்
1. ஆசை மணாளனே ஆமென் நீர் வாருமே
ஆவி மணாளியும் அழைக்கும் ஓசையே
ஓ! ஓ! வேகம் வாருமே
எம் கர்த்தனே நீர்
ஆ, ஆ ஆவல் பெருகுதே – அல்லேலூயா
கீதங்கள் பாடிப் பறந்து செல்வோமே
2. சுத்த பிரகாசமாம் தூயரின் நீதியாம்
சித்திர தையலாம் தேசுடை அணிந்தாள்
3. பிதாவின் நாமமே நெற்றியில் ஏற்றவள்
புதிய பாட்டுடன் சீயோனில் நிற்கிறாள்
4. எப்போ நான் காண்பேனோ என் ஆசை ஏறுதே
பொற்பரன் இயேசுவைக் கண்டு களிக்கவே
1. aasai mannaalanae aamen neer vaarumae
aavi mannaaliyum alaikkum osaiyae
o! o! vaekam vaarumae
em karththanae neer
aa, aa aaval perukuthae – allaelooyaa
geethangal paatip paranthu selvomae
2. suththa pirakaasamaam thooyarin neethiyaam
siththira thaiyalaam thaesutai anninthaal
3. pithaavin naamamae nettiyil aettaval
puthiya paattudan seeyonil nirkiraal
4. eppo naan kaannpaeno en aasai aeruthae
porparan yesuvaik kanndu kalikkavae