Aa Kazhi Koornthu Poorithu ஆ களிகூர்ந்து பூரித்து
1. ஆ, களிகூர்ந்து பூரித்து
மகிழ், என் மனதே
பராபரன்தான் உனது
அநந்த பங்காமே.
2. அவர் உன் பங்கு, உன் பலன்;
உன் கேடகம் நன்றாய்த்
திடப்படுத்தும் உன் திடன்;
நீ கைவிடப்படாய்.
3. உன் நெஞ்சு ராவும் பகலும்
துக்கிப்பதென்ன? நீ
உன் கவலை, அனைத்தையும்
கர்த்தாவுக்கொப்புவி.
4. உன் சிறு வயது முதல்
பராமரித்தாரே;
கர்த்தாவால் வெகு மோசங்கள்
விலக்கப்பட்டதே.
5. கர்த்தாவின் ஆளுகை எல்லாம்
தப்பற்றதல்லவோ,
அவர் கைசெய்கிறதெல்லாம்
நன்றாய் முடியாதோ?
6. ஆகையினால் கர்த்தாவுக்கு
நீ பிள்ளைப் பக்தியாய்
எப்போதும் கீழ்ப்படிந்திரு
அப்போது வாழ்வாய்.
1. aa, kalikoornthu pooriththu
makil, en manathae
paraaparanthaan unathu
anantha pangaamae.
2. avar un pangu, un palan;
un kaedakam nantayth
thidappaduththum un thidan;
nee kaividappadaay.
3. un nenju raavum pakalum
thukkippathenna? nee
un kavalai, anaiththaiyum
karththaavukkoppuvi.
4. un sitru vayathu muthal
paraamariththaarae;
karththaavaal veku mosangal
vilakkappattathae.
5. karththaavin aalukai ellaam
thappattathallavo,
avar kaiseykirathellaam
nantay mutiyaatho?
6. aakaiyinaal karththaavukku
nee pillaip pakthiyaay
eppothum geelppatinthiru
appothu vaalvaay.