Abhishegam Pettra Sheeshar அபிஷேகம் பெற்ற சீஷர்
1. அபிஷேகம் பெற்ற சீஷர்
தெய்வ வாக்கைக் கூறினார்
கட்டளை கொடுத்த மீட்பர்
“கூட இருப்பேன்” என்றார்.
2. இயேசுவே, நீர் சொன்ன வண்ணம்
ஏழை அடியாருக்கே
ஊக்கம் தந்து நல்ல எண்ணம்
சித்தியாகச் செய்வீரே.
3. முத்திரிக்கப்பட்ட யாரும்
ஆவியால் நிறைந்தோராய்
வாக்கைக் கூற வரம் தாரும்,
அனல்மூட்டும் தயவாய்.
4. வாக்குத்தத்தம் நிறைவேற
சர்வ தேசத்தார்களும்
உந்தன் பாதம் வந்து சேர
அநுக்கிரகம் செய்திடும்.
5. பிதா, சுதன், தூய ஆவி
என்னும் தேவரீருக்கே
தோத்திரம், புகழ்ச்சி, கீர்த்தி
விண் மண்ணில் உண்டாகுமே.
1. apishaekam petta seeshar
theyva vaakkaik koorinaar
kattalai koduththa meetpar
“kooda iruppaen” entar.
2. yesuvae, neer sonna vannnam
aelai atiyaarukkae
ookkam thanthu nalla ennnam
siththiyaakach seyveerae.
3. muththirikkappatta yaarum
aaviyaal nirainthoraay
vaakkaik koora varam thaarum,
analmoottum thayavaay.
4. vaakkuththaththam niraivaera
sarva thaesaththaarkalum
unthan paatham vanthu sera
anukkirakam seythidum.
5. pithaa, suthan, thooya aavi
ennum thaevareerukkae
thoththiram, pukalchchi, geerththi
vinn mannnnil unndaakumae.