Anbarae Koodungal Aanantham அன்பரே கூடுங்கள் ஆனந்தம்
பல்லவி
அன்பரே கூடுங்கள் ஆனந்தம் பாடுங்கள்
எம்பதன் இயேசுவை என்றென்றும் நாடுங்கள்
1. நல்லநாள் இதிலே நாதனைப் பணியுங்கள்
செல்வ பாக்கியந்தரும் சீமானைத் தேடுங்கள் – அன்பரே
2. சுவிசேஷப் பண்டிகை சோபன தினமதில்
கவி பாடிப் போற்றியே கர்த்தனைக் கொண்டாடுங்கள் – அன்பரே
3. வல்ல தேவன் நம்மோடு வந்திட மன்றாடுங்கள்
தொல்லையணுகாமலே சுத்தனருள் செய்குவார் – அன்பரே
4. கர்த்தரின் கட்டளை கைக்கொண்டு திட்டமாய்
உத்தமரின் திவ்ய ரட்சிப்பைக் கூறுவோம் – அன்பரே
5. பக்தியாய் ஜெபித்துப்பாடியே பூரிப்போம்
நித்தனார் நம்மையே நீடூழி வாழ்விப்பார் – அன்பரே
6. ஆத்தும ஆதாயம் அன்புடனே செய்குவோம்
பாத்திர ராக்கியே பரனாசீர் புரிவார் – அன்பரே
pallavi
anparae koodungal aanantham paadungal
empathan yesuvai ententum naadungal
1. nallanaal ithilae naathanaip panniyungal
selva paakkiyantharum seemaanaith thaedungal – anparae
2. suviseshap panntikai sopana thinamathil
kavi paatip pottiyae karththanaik konndaadungal – anparae
3. valla thaevan nammodu vanthida mantadungal
thollaiyanukaamalae suththanarul seykuvaar – anparae
4. karththarin kattalai kaikkonndu thittamaay
uththamarin thivya ratchippaik kooruvom – anparae
5. pakthiyaay jepiththuppaatiyae poorippom
niththanaar nammaiyae neetooli vaalvippaar – anparae
6. aaththuma aathaayam anpudanae seykuvom
paaththira raakkiyae paranaaseer purivaar – anparae