Anbar Anbai Yaaral Kooralam அன்பர் அன்பை யாரால்
அன்பர் அன்பை யாரால்
கூறலாம் ஆ! ஆச்சரியம்
அன்பாகவே இருக்கும் என்
நேசர்.
அனுபல்லவி
அன்பின் உயரம் நீளம் அகலம்
ஆழம் அளக்க யாரால் கூடும்
அன்பரின் பேரன்பை இங்கு
அழகாய் கூற யாரால் கூடும்.
பல்லவி
அன்பர் அன்பை யாரால் கூறலாம் – ஆ! ஆச்சரியம்
அன்பாகவே இருக்கும் என் நேசர்!
அனுபல்லவி
அன்பின் உயரம் நீளம் அகலம் ஆழம் அளக்க யாரால் கூடும்!
அன்பரின் பேரன்பை இங்கு அழகாய்க் கூற யாரால் கூடும்! – அன்பர்
சரணங்கள்
1. எல்லா ஜலமும் மையானாலுமே – அன்பை எழுதிட
எல்லா மரமும் பேனாவானாலுமே
ஆகாயத்தைத் தாளாக்கி அதிலெல்லாம் எழுதினாலும்
அன்பின் அம்சம் எழதித் தீ்ர்க்க அன்பர் எங்குதானுண்டு – அன்பர்
2. மாந்தர் மேலே பாய்ந்த அன்பைத்தான் – ஆழ்ந்து தூதரும்
பார்ப்பதில் பணிந்து குணிகிறார்
பாவி மேலே பாய்ந்த அன்பு சாவின் கூரை ஒடித்து வென்றது
என்ன அன்பு என்ன நேசம் மன்னரேசின் மகத்துவநேசம்! – அன்பர்
3. ஏழை என்னில் பாய்ந்த அன்புதான் – ஆ! ஏராளம்
ஏழை என்னால் பகரக் கூடுமோ
அல்லும் பகலும் கூடிப்பாடி அங்கும் இங்கும் அன்பைக் கூறுவேன்
அன்பின் இன்பம் ருசித்துப் புசித்து அன்பை மட்டும் எங்கும் கூறுவேன்! – அன்பர்
anpar anpai yaaraal
kooralaam aa! aachchariyam
anpaakavae irukkum en
naesar.
anupallavi
anpin uyaram neelam akalam
aalam alakka yaaraal koodum
anparin paeranpai ingu
alakaay koora yaaraal koodum.
pallavi
anpar anpai yaaraal kooralaam – aa! aachchariyam
anpaakavae irukkum en naesar!
anupallavi
anpin uyaram neelam akalam aalam alakka yaaraal koodum!
anparin paeranpai ingu alakaayk koora yaaraal koodum! – anpar
saranangal
1. ellaa jalamum maiyaanaalumae – anpai eluthida
ellaa maramum paenaavaanaalumae
aakaayaththaith thaalaakki athilellaam eluthinaalum
anpin amsam elathith thee்rkka anpar enguthaanunndu – anpar
2. maanthar maelae paayntha anpaiththaan – aalnthu thootharum
paarppathil panninthu kunnikiraar
paavi maelae paayntha anpu saavin koorai otiththu ventathu
enna anpu enna naesam mannaraesin makaththuvanaesam! – anpar
3. aelai ennil paayntha anputhaan – aa! aeraalam
aelai ennaal pakarak koodumo
allum pakalum kootippaati angum ingum anpaik kooruvaen
anpin inpam rusiththup pusiththu anpai mattum engum kooruvaen! – anpar