Adho Oru Natchathiram அதோ ஒரு நட்சத்திரம்
அதோ ஒரு நட்சத்திரம்
தேவன் அன்பிற்குத் தான் இது பொற்சித்திரம்
அழகாக வழி காட்டுதே
தேவன் பிறந்தாரே எனக் கூறுதே
ஒரு பாடல் கேட்குதே
தூதர் வாழ்த்து பாடவே
1. வானத்தில் வழி அறிந்து
ஞாலத்தில் நடந்தனரே
ஞானத்தில் தன்னை மறந்து
ஏரோதை அடைந்தனரே
சின்னச் சின்ன தேவா பாலன் எங்கிருகிறார்
அதைக் கண்டுகொள்ள வேண்டும் இன்று என்று கூறினார்
வாழ்க வாழ்க திரு சுதனே
உம்மை வாழ்த்திப் பாடும் எங்கள் மனமே
2. விண்மீனின் வழி உணர்ந்து
விரைவாக நடந்தனரே
யாக்கோபின் விடிவெள்ளியை
எதிர்நோக்கி விரைந்தனரே
கண்கள் மின்ன தேவா சுதன் அங்கு இருக்க
பொன்னும் வெள்ளி தூபவர்க்கம் யாவும் படைக்க
வாழ்க வாழ்க திரு சுதனே
உம்மை வாழ்த்திப் பாடும் எங்கள் மனமே
3. பார் போற்றும் அதிசயமே
பரனோடு இருந்தவரே
தெய்வீகக்கதிரொளியே
பரலோகக்கருப்பொருளே
ஒரு சந்தம் சொல்லிப்பாடவந்தோம் இந்தநாளிலே
இனி சொந்தம் நீரே என்று உம்மை சொல்வோம் பாலனே
வாழ்க வாழ்க திரு சுதனே
உம்மை வாழ்த்திப் பாடும் எங்கள் மனமே
atho oru natchaththiram
thaevan anpirkuth thaan ithu porsiththiram
alakaaka vali kaattuthae
thaevan piranthaarae enak kooruthae
oru paadal kaetkuthae
thoothar vaalththu paadavae
1. vaanaththil vali arinthu
njaalaththil nadanthanarae
njaanaththil thannai maranthu
aerothai atainthanarae
sinnach sinna thaevaa paalan engirukiraar
athaik kanndukolla vaenndum intu entu koorinaar
vaalka vaalka thiru suthanae
ummai vaalththip paadum engal manamae
2. vinnmeenin vali unarnthu
viraivaaka nadanthanarae
yaakkopin vitivelliyai
ethirnnokki virainthanarae
kannkal minna thaevaa suthan angu irukka
ponnum velli thoopavarkkam yaavum pataikka
vaalka vaalka thiru suthanae
ummai vaalththip paadum engal manamae
3. paar pottum athisayamae
paranodu irunthavarae
theyveekakkathiroliyae
paralokakkarupporulae
oru santham sollippaadavanthom inthanaalilae
ini sontham neerae entu ummai solvom paalanae
vaalka vaalka thiru suthanae
ummai vaalththip paadum engal manamae