Akkiniye Deva Akkiniye அக்கினியே தேவ அக்கினியே
அக்கினியே தேவ அக்கினியே இறங்கிடுமே
இப்போ இறங்கிடுமே
தேவ நதியே ஜீவ நதியே பாய்ந்திடுமே
என்னில் பாய்ந்திடுமே (2)
ஆவியால் அக்கினியால் என்னை
அபிஷேகிப்பேன் என்றீரே (2)
உம் மகா வல்லமையால்
என்னை நிரப்பிடுமே இயேசுவே (2) – அக்கினியே
அக்கினி நாவுகளாய் என்னில்
அமர்ந்திடும் தேவ ஆவியே (2)
பற்பல பாஷைகளை
பேசி துதித்திட செய்திடுமே- நான்(2) – அக்கினியே
பலீபீட அக்கினியால்
என் நாவை தொடும் தேவனே (2)
நான் பரிசுத்தத்தோடு என்றும்
உம் திருப்பணி செய்திடவே (2) – அக்கினியே
அக்கினி நதியாய் என்னில் இன்று
பாய்ந்திடும் தேவ ஆவியே (2)
நான் அவியாத அக்கினியாய் என்றும்
எரிந்திட செய்திடுமே (2) – அக்கினியே
akkiniyae thaeva akkiniyae irangidumae
ippo irangidumae
thaeva nathiyae jeeva nathiyae paaynthidumae
ennil paaynthidumae (2)
aaviyaal akkiniyaal ennai
apishaekippaen enteerae (2)
um makaa vallamaiyaal
ennai nirappidumae yesuvae (2) – akkiniyae
akkini naavukalaay ennil
amarnthidum thaeva aaviyae (2)
parpala paashaikalai
paesi thuthiththida seythidumae- naan(2) – akkiniyae
paleepeeda akkiniyaal
en naavai thodum thaevanae (2)
naan parisuththaththodu entum
um thiruppanni seythidavae (2) – akkiniyae
akkini nathiyaay ennil intu
paaynthidum thaeva aaviyae (2)
naan aviyaatha akkiniyaay entum
erinthida seythidumae (2) – akkiniyae