நீரே என் சொந்தம் நீரே என் அன்பர்
வெண்மையும் சிவப்புமானவர்
ஆயிரம் பதினாயிரம் சிறந்தவர்
புறாவின் கண்கள் உடையவர்
முற்றிலும் அழகு உள்ளவர்
இவரே இவரே என் நேசர் என் நேசர்
எந்தன் நேசர் நெஞ்சமே
நான் சாயும் மஞ்சமே
நேசர் எனக்கு உரியவர்
நான் அவருக்குரியவள்
இடதுகை என் தலைகீழே
வலக்கரம் என்னை அணைக்குதே
நேசர் அன்பு இன்பமே
தேனிலும் அதி மதுரமே