என் தேவனே என் அன்பனே என் இருதயம் உம்மை துதிக்கும் கர்த்தாவே மகிமையாய்
நான் கூப்பிட்ட அந்நாளிலே எனக்கு உத்தரவருளினீர்
ஆத்துமாவில் பெலன் தந்து என்னை தைரியப்படுத்தினீர்
ஊமது வார்த்தை கேட்கும்போது ராஜாக்கள் உம்மை துதிப்பார்கள்
கர்த்தரின் மகிமை பெரிதாயிருப்பதால் கர்த்தரின் வழியை பாடுவார்கள் - உம் 
 நீர் உயர்ந்தவராயினும் தாழ்மை யுள்ளவனை நோக்குகின்றீர்
மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகின்றீர்
துன்பத்தின் நடுவில் நடந்தாலும் தேவனே என்னை உயிர்ப்பிப்பீர்
சுத்துருவின் போபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர் - உம் 
 எனக்காக யாவற்றையும் இரட்சிப்பின் கர்த்தர் செய்து முடிப்பார்
கர்த்தாவே உம் கிருபை என்றென்று முள்ளதால் ஸ்தோத்தரிப்பேன்
வலது கரத்தால் இரட்சிப்பீர் நேசரே உம்மை போற்றுகிறேன்
உமது கரத்தின் கிரியைகளை நெகிழ விடாதிருப்பீராக - உம் 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter