• waytochurch.com logo
Song # 24882

இனிமை இனிமை இது இனிமை மகிமை மகிமை புது மகிமை


காலையும் மாலையும் புது கிருபை

கண்ணிண் மணிபோல் காக்கும் கிருபை

இறுதி வரைக்கும் வரும் கிருபை

நிலைத்திருக்கும் நம் தேவ கிருபை - இனிமை
மலைகள் விலகினாலும் மாறா கிருபை

மன்னன் இயேசு வாக்களித்த வல்ல கிருபை

பர்வதங்கள் பெயர்ந்து பயங்கரம் சூழ்ந்தாலும்

பரிசுத்தவான்களை காக்கும் கிருபை - இனிமை
அனாதி சினேகத்தால் வந்த கிருபை

ஆயிரம் தலைமுறை காக்கும் கிருபை

அழகிய தேவ குமாரன் இயேசு

அளித்திட்ட அதிசயமான கிருபை - இனிமை
வனாந்தர வழிதனில் வந்த கிருபை

வழி தப்பிப் போனோரை காக்கும் கிருபை

வல்லமையுள்ள தேவனின் ஆவி

வரம் தந்து காத்திட்ட தேவ கிருபை - இனிமை

Posted on
Comments
Write Comment
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2022 Waytochurch.com