AlaKaanaVaR அழகானவர் அருமையானவர் இனிமையானவர்
அழகானவர் அருமையானவர் இனிமையானவர்
மகிமையானவர் மீட்பரானவர்
அவர் இயேசு இயேசு இயேசு
1. சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் இராஜா
என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலன்
இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர்
என்னுடையவர் என் ஆத்ம நேசரே
2. கன்மலையும் கோட்டையும் துணையுமானவர்
ஆற்றித் தேற்றிக் காத்திடும் தாயுமானவர்
என்றென்றும் நடத்திடும் எந்தன் இராஜா
என்னுடையவர் என் நேச கர்த்தரே
3. கல்வாரி மேட்டினில் கொல்கொதாவிலே
நேசர் இரத்தம் சிந்தியே என்னை மீட்டார்
பாசத்தின் எல்லைதான் இயேசு இராஜா
என்னுடையவர் என் அன்பு இரட்சகர்
alakaanavar arumaiyaanavar inimaiyaanavar
makimaiyaanavar meetparaanavar
avar yesu yesu yesu
1. senaikalin karththar nam makimaiyin iraajaa
entum nammotirukkum immaanuvaelan
immattum inimaelum enthan naesar
ennutaiyavar en aathma naesarae
2. kanmalaiyum kottaைyum thunnaiyumaanavar
aattith thaettik kaaththidum thaayumaanavar
ententum nadaththidum enthan iraajaa
ennutaiyavar en naesa karththarae
3. kalvaari maettinil kolkothaavilae
naesar iraththam sinthiyae ennai meettar
paasaththin ellaithaan yesu iraajaa
ennutaiyavar en anpu iratchakar