anukraga vaarththaiyode அனுக்ரக வார்த்தையோடே – இப்போது
அனுக்ரக வார்த்தையோடே – இப்போது
அடியாரை அனுப்புமையா
மனமதில் தயவுறும் மகத்துவபரனே
வந்தனம் உமாக்காமென்
நின்திரு நாமமதில் – கேட்ட
நிர்மலமாம் மொழிகள்
சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
சாமி நின்னருள் புரிவாய்
தோத்திரம் புகழ் மகிமை – கீர்த்தி
துதிகனம் தினமுமக்கே
பாத்திரமே அதிசோபிதே பரனே
பாதசரண் ஆமென்