Appa Um Samugathil Eppothum அப்பா உம் சமுகத்தில்
அப்பா உம் சமுகத்தில்
எப்போதும் ஆராதனை
அப்பாவை துதிக்கையிலே
எங்க உள்ளமெல்லாம் பொங்குதையா
தாயைப்போல தேற்றுகிறீர்
தகப்பனைப்போல சுமக்கின்றீர்
சோதனை வருகின்ற நேரமெல்லாம்
தாங்கி எங்களை நடத்துகிறீர்
கூப்பிடும் காக்கை குஞ்சுகட்கும்
ஆகாரத்தை தருகின்றீர்
அவைகளைப் பார்க்கிலும் எங்களையே
மிகவும் நேசித்து நடத்துகிறீர்
எங்கள் மீது கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லுகின்றீர்
தீங்கு வருகின்ற நேரமெல்லாம்
கூடார மறைவில் மறைக்கின்றீர்
appaa um samukaththil
eppothum aaraathanai
appaavai thuthikkaiyilae
enga ullamellaam ponguthaiyaa
thaayaippola thaettukireer
thakappanaippola sumakkinteer
sothanai varukinta naeramellaam
thaangi engalai nadaththukireer
kooppidum kaakkai kunjukatkum
aakaaraththai tharukinteer
avaikalaip paarkkilum engalaiyae
mikavum naesiththu nadaththukireer
engal meethu kannnnai vaiththu
aalosanai sollukinteer
theengu varukinta naeramellaam
koodaara maraivil maraikkinteer