entha nilaiyil naan irunthaalum எந்த நிலையில் நான் இருந்தாலும்
எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
என் நேசர் ஒருவரே
அனாதையாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
அன்பு வேண்டுமா என்று அலைய வைப்பார்கள்
எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
என் நேசர் ஒருவரே — எந்த
பட்டப்படிப்பு இல்லா விட்டால் பலர் வெறுப்பார்கள்
என் பட்டங்களை சொல்லி சொல்லி பரிகசிப்பார்கள்
எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
என் நேசர் ஒருவரே — எந்த
நோயாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
என் நோய்களையே சொல்லி சொல்லி நோகடிப்பார்கள்
எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
என் நேசர் ஒருவரே — எந்த
கடனாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
என் கடன்களையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள்
எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
என் நேசர் ஒருவரே — எந்த