enthan kanmalaiyaanavarae எந்தன் கன்மலையானவரே
எந்தன் கன்மலையானவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே (2)
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே (2)
மகிமைக்கு பாத்திரரே
அனுபல்லவி
ஆராதனை உமக்கே (4) — எந்தன்
சரணங்கள்
1. உந்தன் சிறகுகளின் நிழலில் (2)
என்றென்றும் மகிழச் செய்தீர்
தூயவரே என் துணையாளரே (2)
துதிக்கு பாத்திரரே
2.எந்தன் பெலவீன நேரங்களில் (2)
உம் கிருபை தந்தீரையா
இயேசு ராஜா என் பெலனானீர் (2)
எதற்கும் பயமில்லையே
3. எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம் (2)
உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர்; செய்த நன்மைகளை (2)
எண்ணியே துதித்திடுவேன்