enthan naesar yesu naathaa எந்தன் நேசர் இயேசு நாதா உம்மில் அன்பு கூறுவேன்
எந்தன் நேசர் இயேசு நாதா உம்மில் அன்பு கூறுவேன்
உம்மில் வைக்கும் ஆசையாலே பாவம் யாவும் வெறுப்பேன்
உந்தன் அன்பால் ஏற்றுக் கொண்டு ரத்தம் சிந்தி ரட்சிப்பீர்
நேசர் மா பெரும் கிருபையை நானோ எப்போதும் மறவேன்
எந்தன் நேசர் இயேசு நாதா
உம்மில் அன்பு கூறுவேன்
நேசர் மா பெரும் கிருபையை
நானோ எப்போதும் மறவேன்
எண்ணம் இல்லா எந்தன் வாழ்க்கை அனைத்தையும் மன்னிப்பீர்
பரிசுத்த ஆவி தந்து சத்ய பாதை காட்டினீர்
மேலும் நேர் வழி நடக்க நீர் என் முன்னே செல்கிறீர்
சா மட்டும் நிலைத்து நிற்க உம் கிருபையை ஈகிறீர் — எந்தன்
இனி நான் என் வாழ் நாளெல்லாம் உம்மையே பின் செல்லுவேன்
நன்றியுள்ள சாட்சியாக உம் அன்பை பிரஸ்தாபிப்பேன்
சா மட்டும் உந்தன் துதி எங்கள் வாயில் இருக்கும்
என்னிலும் உம்மோடு வாழ்ந்து நித்யானந்தம் கொள்ளுமே —
எந்தன்