ethaikkuriththum kalakkam illappaa எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா
எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா
எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்
யார் மேலும் கசப்பு இல்லப்பா
எல்லாருக்காகவும் மன்றாடுவேன்
எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா
1. இதுவரை உதவி செய்தீர்
இனிமேலும் உதவி செய்வீர்
2. கவலைகள் பெருகும் போது
கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர்
3. எப்போதும் உம் புகழ்தானே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
4. வலப்பக்கத்தில் இருப்பதனால்
நான் அசைக்கப்படுவதில்லை
5. என் சமூகம் முன் செல்லும்
இளைப்பாறுதல் தருவேன் என்றீர்
6. எனக்காய் யுத்தம் செய்தீர்
யாவையும் செய்து முடிப்பீர்