intu kiristhu elunthaar இன்று கிறிஸ்து எழுந்தார்
1. இன்று கிறிஸ்து எழுந்தார்,
அல்லேலூயா!
இன்று வெற்றி சிறந்தார்;
அல்லேலூயா!
சிலுவை சுமந்தவர்,
அல்லேலூயா!
மோட்சத்தைத் திறந்தவர்,
அல்லேலூயா!
2. ஸ்தோத்ரப் பாட்டுப் பாடுவோம்,
அல்லேலூயா!
விண்ணின் வேந்தைப் போற்றுவோம்,
அல்லேலூயா!
அவர் தாழ்ந்துயர்ந்தாரே;
அல்லேலூயா!
மாந்தர் மீட்பர் ஆனாரே,
அல்லேலூயா!
3. பாடநுபவித்தவர்,
அல்லேலூயா!
ரட்சிப்புக்குக் காரணர்,
அல்லேலூயா!
வானில் இப்போதாள்கிறார்;
அல்லேலூயா!
தூதர் பாட்டைக் கேட்கிறார்,
அல்லேலூயா!