iruthayam yesuvin singaasanam இருதயம் இயேசுவின் சிங்காசனம்
இருதயம் இயேசுவின் சிங்காசனம்
நம்மை இயேசுதான் ஆள வேண்டும்
இந்த உலகம் ஆள்வது நியாயமில்லை
1. என் நாயகரை நான் மறந்து
இந்த உலகத்தை நேசித்து திரிந்தேனே
கர்த்தர் என்னை சிட்சித்து உணர செய்தாரே
கர்த்தர் என்னை ரட்சித்து உணர செய்தாரே
2. என் பாவத்தை சுயமாய் செய்த வேளையில்
என்னை தேடி வந்தாரே
கர்த்தர் முந்தினவைகளை மறக்க செய்தாரே
கர்த்தர் பரிசுத்தமாய் வாழ செய்தாரே
3. இந்த உலகத்தில் யாரும் இல்லை என்று
நான் சாக நினைத்த வேளையிலே
கர்த்தர் எனக்கு புதிய காரியம் செய்தாரே
கர்த்தர் எனக்கு இன்றே தோன்ற செய்தாரே