isravel ennum naatinile இஸ்ரவேல் என்னும் நாட்டினிலே
1. இஸ்ரவேல் என்னும் நாட்டினிலே
பெத்லகேம் என்னும் ஊரினிலே
பிறந்தார் (4) தேவ குமாரன் பிறந்தார்
பிறந்தார் (4) இயேசு கிறிஸ்து பிறந்தார்
உன்னதத்தில் மகிமை
பூமியிலே சமாதானம்
மனுஷர் மேல் பிரியம்
மனுஷர் மேல் பிரியம்
2. கன்னிமரியின் தாய்மையிலே
தாவீது இராஜா வம்சத்திலே
பிறந்தார் (4) அதிசயமானவர் பிறந்தார்
பிறந்தார் (4) முன்னோரின் மேசியா பிறந்தார்
– உன்னதத்தில்
3. சத்திரத்தில் இடம் இல்லையே
மெத்தையோ தொழுமுன்னணையே
பிறந்தார் (4) சிருஷ்டிப்பின் தேவன் பிறந்தார்
பிறந்தார் (4) கர்த்தாதி கர்த்தர் பிறந்தார்
– உன்னதத்தில்