itho manusharin maththiyil thaevaathi thaevanae இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசஞ்செய்கிறாரே
1. மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தலமதுவே
என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே
2. சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடுமிச் சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் என்றுமே
3. முன்னோடியாம் இயேசு பரன்
மூலைக்கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்