jeba aavi ennil ootrum ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா
ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா
ஜெப சிந்தை என்னில் தாரும் தேவா
உறங்காத கண்கள் வேண்டும்
உணர்வுள்ள நெஞ்சம் வேண்டும்
முடியாத கண்ணீர் வேண்டும்
நீரே என்னை நடத்த வேண்டும்
அறைக்குள் கதவை பூட்டி
தரைமட்டும் என்னை தாழ்த்தி
இதயத்தை உம்மிடம் ஏந்தி
ஜெபிக்கின்ற வரமே தாரும்
இராக்கால தரிசனம் தாரும்
அதிகாலை விழிப்பைத் தாரும்
ஆத்தும பாரம் தாரும்
திறப்பிலே நிற்கவும் வேண்டும்