jeevan belan sugam paaril ஜீவன் பெலன் சுகம் பாரில்
ஜீவன் பெலன் சுகம் பாரில்
நலன் யாவும் வாழ்வில்
ஒளி நீரே வழியும் இனி நீரே
தேடினேன் ஓடினேன்
இரட்சிப்பின் நல்நாதா என்றேன் நான்
நாடினேன் வந்திட்டேன்
பாதம் பணிந்தும்மைப் போற்றவே
தந்தை போல் மன்னித்து
என்னை ஏற்று அன்பு கொண்டீரே
மந்தையில் சேர்த்திட்டு
சொந்தமாக்கி என்னை மீட்டீரே
மனம் போல் நடந்தேன்
துரோகிபோல் நான் உம்மை மறந்தேன்
என்னையா தேடினீர்
பாவியான என்னை போஷித்தார்