jepa aavi ennil oottum thaevaa ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா
ஜெப ஆவி என்னில் ஊற்றும் தேவா
ஜெப சிந்தை என்னில் தாரும் தேவா
அக்கினியாய் நான் எரிய வேண்டும்
அனல் மூட்டிடும் அழுது புலம்பி ஜெபித்திட
ஜெப ஆவியால் நிரப்புமே
உலகம் மாமிசம் பிசாசினால்
அழியும் மாந்தர்க்காய்
திறப்பின் வாசலில் நின்றிட
ஜெப ஆவியால் நிரப்புமே
இரத்தமும் வேர்வையும் சிந்தியே
ஜெபித்த நேசரே
வாழ்நாளெல்லாம் உம்மைப் போலவே
ஜெப ஆவியால் நிரப்புமே