jepaththin aavalai ஜெபத்தின் ஆவலை
1. ஜெபத்தின் ஆவலை
என் நெஞ்சில் அருளும்;
தெய்வாவீ, லோக நேசத்தை
என்னை விட்டகற்றும்.
2. பூலோக சிந்தையை
வெறுத்துத் தள்ளுவேன்;
மேலான நித்திய இன்பத்தை
நான் தேட ஏவுமேன்.
3. எனக்குத் துணையாய்
என் பக்கத்தில் இரும்;
நான் நிலைநிற்கும்படியாய்
கிருபை அளியும்.
4. தெய்வன்பின் பாசத்தால்
கட்டுண்டு, என்றைக்கும்
உம்மை என் முழு மனதால்
பின்பற்றச்செய்திடும்.