kaatsiperra vaalipanae செயல்படுவோம் வாருங்கள்
செயல்படுவோம் வாருங்கள்
காட்சிபெற்ற வாலிபனே நீ ஆயத்தமாகிடு
கர்த்தரின் பணியை செய்யவே நீ ஆர்த்தெழுந்திடு
ஆயிரம் ஆயிரம் ஜனங்கள் பாவ வழியில் செல்கிறார்
அவர்கள் இயேசுவைக் காணவே நீ எழுந்து புறப்படு
1. திருக்குள்ள நமது இதயம் அதை தேவன் மாற்றினார் – அதை
தேவன் வாழும் இல்லமாகக் குடியேற்றினார்
பாவம் சாபம் அடிமைத்தனம் யாவும் நீக்கினார்
வலிமைபெற்ற மனிதராக நம்மை மாற்றினார்
2. மாயவாழ்வை நம்பி மக்கள் எங்கும் மோசம் போகிறார் – பின்
தூய வாழ்வை பெற்றுக் கொள்ள அங்கலாய்க்கிறார்
பாவப்பரிகாரம் இயேசு என்று முழங்குவோம்
சாபம் நீக்கி ஜனங்கள் வாழும் வழியைக் காட்டுவோம்
3. தூய உள்ளம் கொண்ட அனைவருமே திரண்டு வாருங்கள் – நாம்
தேவ சித்தம் செய்ய நம்மை அர்ப்பணம் செய்வோம்.
காடு மலை நாடு நகரம் தேசம் எங்கிலும்
கர்த்தர் அன்றி தேவனில்லை என்று கூறுவோம்