கல்வாரி சிலுவை நாதா
Kalvaari Siluvai Naathaa
கல்வாரி சிலுவை நாதா 
காரிருள் நீக்கும் தேவா 
பல்வினை பலனாம் பாவம் 
புரிந்தவர் எமைக்கண் பாரும் (2) — கல்வாரி 
1. மன்னுயிர் மீட்கும் அன்பால் 
தன் உயிர் மாய்த்தாய் அன்பே 
மன்பதை மாந்தர் முன்னால் 
தரணியை இழுத்தாய் நின்பால் (2) — கல்வாரி
2. தூயவன் நின்னை கண்டோர்
தீ உள்ளம் தெளிந்தே நிற்பார் 
சேய் உள்ளம் தந்தாய் அருளாய் 
வாய் உள்ளம் தந்தேன் புகழாய் (2) — கல்வாரி
kalvaari siluvai naathaa 
kaarirul neekkum thaevaa 
palvinai palanaam paavam 
purinthavar emaikkann paarum (2) — kalvaari 
1. mannuyir meetkum anpaal 
than uyir maayththaay anpae 
manpathai maanthar munnaal 
tharanniyai iluththaay ninpaal (2) — kalvaari
2. thooyavan ninnai kanntoor
thee ullam thelinthae nirpaar 
sey ullam thanthaay arulaay 
vaay ullam thanthaen pukalaay (2) — kalvaari

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter