kalvari nayagane – கல்வாரி நாயகனே
Kalvari Nayagane
கல்வாரி நாயகனே கண்களில் நிறைந்தவரே
கரம்பிடித்தவரே கைவிடா கன்மலையே
உமக்கே ஸ்தோத்திரம் – 2
உயிருள்ள நாளெல்லாம்
உமக்கே ஸ்தோத்திரம்
1. என்னை இழுத்துக் கொள்ளும்
ஓடி வந்திடுவேன்
அறைக்குள் அழைத்துச் செல்லும்
அன்பில் களிகூறுவேன்
2. திராட்சை இரசம்பார்க்கிலும்
இனிமையானவரே
ஊற்றுண்ட பரிமளமே
உலகெல்லாம் உம் மணமே
3. இடக்கையால் தாங்குகிறீர்
வலக்கையால் தழுவுகிறீர்
எனக்கு உரியவரே இதயம் ஆள்பவரே
4. உம் மீது கொண்ட நேசம்
அக்கினி ஜீவாலையன்றோ
தண்ணீரும் வெள்ளங்களும்
தணிக்க முடியாதையா